Thursday, November 15, 2007

Post Production, computer Graphics & சில

இந்த படத்தை பாருங்கள்.




நன்றாக இருக்கிறதா ?

கவனிக்க வேண்டிய விஷயம் மூன்று இருக்கிறது. நீர் விழுவதை தெளிவாகக் காட்ட கொஞ்சம் பெரிய exposure/shutter அளவு தேவை. அதே சமயம் ஈபில் டவர் வெளிறிப் போகாமல் இருக்க அதை விட கொஞ்சம் சிறிய exposure/shutter தேவை. வானத்தில் இருக்கும் நிலவு வெறும் வெள்ளை வட்டமாக மட்டும் இல்லாமல் இருக்க இந்த இரண்டையும் விட அதிக exposure/shutter தேவை. இந்த முன்று exposure களையும் ஒரே கிளிக்கில் எடுக்கமுடியாது. உங்களிடம் எந்த நவீன ,விலை உயர்ந்த கேமரா இருந்தாலும்.


சரி,, வெறும் கண்ணால் பார்க்கும்போது நம்மால் இந்த மூன்று பகுதிகளையும் அழகாக உணர முடிவதை எப்படி புகைப்படத்தில் கொண்டு வருவது ?

ஒரு எளிய வழி ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனி exposure செய்து பின்னர் இணைக்கலாம்.
இது வெறும் computer Graphics, வெட்டி ஒட்டும் வேலை என்ற கருத்தும் இருக்கிறது.


பிறசேர்க்கையே செய்யக்கூடாது என்று ஒரு கூட்டம் கருதுகிறது. கொஞ்சம் செய்யலாம் ( contrast , brightness, கட்டம் போடுவது ) என்று ஒரு கூட்டம். மூன்றாவது கூட்டம் படம் அழகாகத் தெரிய என்ன வேண்டுமானலும் செய்யலாம். ( இல்லாத மேகத்தையும் சேர்க்கலாம் ) என்பது.

மூன்றுக்கும் அதிக வித்தியாசமில்லை. எந்த டிஜிடல் கேமராவில் எடுத்த படமும் கேமராவால் நிறைய முற்சேர்க்கை செய்யப்பட்ட பிறகே வெளி வருகிறது ( நீங்கள் "raw" முறையில் படம் எடுக்காத வரையில் ). இதில் கொஞ்சம் என்ன, நிறைய என்ன என்பது நமது அளவுகோலில்தான்.


பிறசேர்க்கை முறைகள் , வெட்டி ஒட்டுவது என்பது ஏதோ பாவச் செயல் போலவும் நிறைய இடங்களில் பின்னூட்டங்களை படித்து இருக்கிறேன்.. இது என்னவோ புதிதாய் வந்த முறைகள் இல்லை. காலம்காலமாய் செய்யப்பட்டு வருவதே. என்ன முன்னர் கொஞ்சம் காசு , நிறைய நேரம் செலவழித்து சொந்த ஸ்டுடியோ போட்டு dark room-ல் செய்ய வேண்டு இருந்து இருக்கும். இப்ப GIMP-ல் ஐந்து பத்து நிமிடத்தில் செய்து விடலாம்.

தலைவர் கவுண்டமணி ஒருபடத்தில் சொல்வது போல

கோழி குருடா இருந்தா என்ன , செவிடா இருந்தா என்ன, குழம்பு ருசியாய் இருந்தா சரிதான் !!

7 comments:

said...

:-)
Awesome work!!

I guess you know iam in the second category (some PP is Ok-section)
Nothing right or wrong abt any of the ideas,just that different people subscribe to the one to their liking!! :-)

said...

நன்றி சீவீஆர்
வெட்டி ஒட்டுனது தெரியுதா ?
கொஞ்ச நாளுக்கு முன்னர் செய்தது.

said...

நீங்களே சொன்னாதான் தெரியும்!!
நீங்க சொன்ன அப்புறம் தான் நானும் realise பண்ணேன்!!
ஒரே ஷாட்ல எல்லாத்தையும் இவ்ளோ சரியா எக்ஸ்போஸ் பண்ணுறது ரொம்ப கஷ்டம் தான் (if not impossible)

said...

நான் கவுண்டமணி கச்சி - வெட்டி ஒட்டுனது படம் பாக்குற நெரெய பேருக்குத் தெரியாது

said...

நன்றி சீனா ( நானும் உங்க கட்சிதான் ! )

சீவீஆர்

// ரொம்ப கஷ்டம் தான் (if not impossible)

எப்படி முடியும் என்று நினைக்கிறீர்கள். ஒரு படத்துக்கு ஒரு அபெர்சர்/ ஒரு ஷ்ட்டர் ஸ்பீடுதான் வைக்க முடியும். மூன்றுத்துக்கும் எப்படி ஒரே சரியாக வரும். ஏதாவது கணக்கு/filter இருக்கா ?

said...

Ok!!
its impossible!!

happy now?? :-D
ha ha ha

said...

:)