செலவே இல்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு $0 செலவில் சின்ன ஸ்டுடியோ அமைக்க முடியுமா என்ற முயற்சியில் எடுத்தப் படம் தான் இந்த வாட்ச் படம்.

எடுத்த ஸ்டுடியோ பார்க்க வேண்டுமா ? இதுதான் அது !!!
தேவையான பொருட்கள்.
1. நல்ல நேரடியான வெளிச்சம் வரதா ஜன்னல். ( வடக்கு நோக்கி இருக்கும் ஜன்னல் உத்தமம் ). வடக்கு பார்க்காத ஜன்னல் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. மெல்லிய திரை போட்டு மூடிக் கொள்ளலாம்.
2. சலவைக் கூடை.
3. மெல்லிய ஃபாஸ்டிக். குப்பை கூடைக்கும் போடும் இந்த மாதிரியான கவர் கூடப் போதும்.
4. வெள்ளைப் பேப்பர். பின்னணித் திரைக்கு.
அவ்வளவுத்தான். கூடைக்குள் ஃப்ளாஸ்டிக் கவரை மூடி, வெள்ளை பேப்பரை உள்ளே வைத்து படம் எடுக்க வேண்டியதுதான்.




12 comments:
சுத்தம்............
எனக்கு ஒண்ணும் புரியலை(-:
பின்னணி எப்பவும் வெள்ளையாவே இருக்கணுமா?
வீட்ல கேள்வி கேக்க ஆளில்லயா? :)
நல்ல ஐடியாதான், முயற்சி செய்யரேன்.
சர்வேசன்
ஹி ஹி.
அக்கா
என்ன புரியலை இதில் உங்களுக்கு ? வெள்ளையாய் வேண்டாம் எனில் எந்த கலர் பேப்பரை வேண்டுமானுல் பிண்ண்ணணியாய் போட்டுக்க வேண்டியதுதான் நம்ம விருப்பப்படி !
Thanks... Nice idea
ஓஒ முயற்சி செய்துடலாமே...காசா பணமா என்ன ? நன்றி .
நல்ல முயற்சி... கல்யானம் முடிஞ்சப் பின்னாடி , ஒரு புகைப்படக்காரர் அவரோட கற்பனை திறன் எல்லாம் யூஸ் பன்னி இப்படி இம்சை பன்னினார்..அதுக்கு அப்புறம் இப்போ தான் இந்த மெத்தெட்யைப் பாக்குறேன்
ரொம்ப நாளா யோசிச்சுட்டு இருந்தேன்... இந்த மாதிரி படங்கள் எப்படி எடுக்கிரதுன்னு! கலக்கிட்டீங்க.
நல்ல முயற்சி! பாராட்டவேண்டியதுதான். நல்லாத்தான்
இருக்கு. இன்னும் இதுபோல் ஐடியாக்கள் கொடுக்கவும்.
நன்றி
athi, நானானி
other nice idea here !!
http://strobist.blogspot.com/2006/07/how-to-diy-10-macro-photo-studio.html
நன்றிங்க..முயற்சி செய்கிறேன்..;))
அசத்தல்!
அழுக்குக்கூடை ஸ்டூடியோவா?
எவ்வளவு கஷ்டப்படணும்னு காண்பிக்கிறீங்க. படுறோம்.
நன்றி
Post a Comment