Monday, May 07, 2007

புகைப்படக் கலைஞர் 1 Nick Brandt

என்னை கவர்ந்த புகைப்படக் கலைஞர் 1 - Nick Brandt

மைக்கல் ஜாக்ஸ்னின் பாடல்களுக்கு திரை வடிவம் கொடுக்கும் இயக்குனாராக இருந்த Nick brandt இப்போது முழு நேர புகைப்படக் கலைஞர் ஆகிவிட்டார். முதலில் இவரை பற்றி அறிய உதவியது இவரின் On this earth புத்தகம்.

ஆப்பிரிக வனவிலங்குகளை அவைகளின் இருப்பிடங்களிலேயே புகைப்படங்கள் எடுப்பது இவரின் சிறப்பு அம்சம். Telephoto லென்ஸ் உபயோகப்படுத்தாமல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை என்பதில் இருந்தே எவ்வளவு அருகில் இருந்து இந்த படங்களை அவர் எடுத்து இருக்கவேண்டும் என்று தெரியவரும்.

இந்த புகைப்படங்கள் எந்த கேமராக் கொண்டு எந்த வகை லென்ஸ்கள் உபயோகப்படுத்தி அல்லது எந்த அளவிற்கு photoshop பயன்படுத்தி எடுக்கப் படுகின்றன என்பது பற்றி நிறைய கருத்துக்கள் இருப்பினும் இந்த படங்கள் ஒவ்வொன்றும் அருமையான, ஆப்பிரிக்காவின் அழியும் இயற்கை வளத்தை பற்றிய மெல்லிய சோகம் கொண்டப் படங்கள் என்பதில் மாற்று கருத்து ஏதும் இல்லை.


Copy right Nick Brandt


Copy right Nick Brandt


Copy right Nick Brandt


Copy right Nick Brandt


Copy right Nick Brandt



All copyright of the images belong to Nick Brandt !

3 comments:

said...

Great shots! ;-)

said...

mmm!

said...

நான் இது வரை கண்ட வனவிலங்குப் புகைப்படங்களில் நிக்கின் படங்கள் தான் அவற்றின் உண்மையான சோகத்தை வெளிப்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன், கேரமாவும் கையுமாக வனப் பகுதிகளில் சுற்றிய அனுபவங்கள் எனக்கு நிறை உண்டு.... பின் பாதை மாறி தற்போது பத்திரிகை ஒன்றில் துணை ஆசிரியராக இருக்கிறேன். நிக்கின் படங்களைப் பார்க்கும் போது மீண்டும் என் எஸ்.எல்.ஆரை தூக்கிவிடலாமா என்றொரு எண்ணம் பிறக்கிறது........ படங்களுக்கு நன்றி......