இது போர் விமானம் பற்றியது அல்ல. லைட் மீட்டர் இல்லாமல் சரியான அபெர்சர்( Aperture), ஷட்டர் ஸ்பீட் (Shutter Speed ) கண்டுபிடிக்க ஒரு எளிய விதி.
ஞாயபகம் வைத்துக் கொள்வது மிக எளிது. விதி இதுதான்.
நல்ல பகல் வெளிச்சத்தில்
அபெர்சர் f/16 வைத்தால், ஷட்டர் ஸ்பீட் = 1/ISO .
உதாரணத்திற்கு,
நீங்கள் உபயோகிக்கும் ISO 200 வைத்துக் கொண்டால் ஷட்டர் ஸ்பீட் 1/200 அபெர்சர் f/16 . அவ்வளவுதான்.
வெளிச்சத்தின் அளவு குறைய ISO அதிகரிக்கும். ISO 100 நல்ல பகல் வெளிச்சதிற்கு, ISO 1600 வீட்டுக்குள் குறைந்த வெளிச்சதிற்கு.
இந்த f/16 விதியை கொஞ்சம் நீட்டினால் மற்ற கால நிலைகளுக்கும் சரியான அபெர்சர் ஷட்டர் ஸ்பீட் பெறலாம். கீழே உள்ள பட்டியல் மூலம்.
மேக மூட்டத்துடன் கூடிய வானம் f/11
அதிக மேகமூட்டம் f/8
நிழல் f/5.6
முயற்சி செய்துப்ப் பாருங்கள். உங்கள் கேமராவும் இந்த முறையில் தான் கணக்கிடும்.
எவ்வளவு நாள்தான் கேமராதரும் எண்களையே நம்புவது :-)
Monday, August 07, 2006
Subscribe to:
Post Comments (Atom)
11 comments:
"ISO 1600" பயன்படுத்தினால் அதிகம் noise வராது ?!
என்ன காமெரா பயன்படுத்துகின்றீர்கள்.
நான் அதிகமாய் உபகோகிப்பது f11 &1/200 if iso is 200
சில சமயம் ஒன்று இரண்டு stop முன்னப் பின்ன வைத்து எடுத்து எனக்குப் பிடித்ததை வைத்துக் கொள்வேன்
இது!!
இதைதான் எதிர்பார்த்தேன்.
முயற்சித்துவிட்டு சொல்கிறேன்.
தகவல்களுக்கு நன்றி
கார்த்திக்வேலு
ஆமாம். ISO அதிகரிக்க noise அதிகரிக்கும். ஆனால் குறைந்த வெளிச்சதில் ISO அதிகரிக்காவிட்டால், shutter speed அதிகமாக்க வேண்டி இருக்கும். Tripod இல்லாவிட்டால் கடினம்தான் தான். Post processing செய்யும் போது noise நீக்கிவிடலாம்.
Out of Focus விட nosie பரவாயில்லைதானே !!
Canon 350D, Nikon 5400
கூத்தாடி
வருகைக்கும் தகவலுக்கும் நன்றி. என்ன கேமரா உபயோகிக்கிறீர்கள்
குமார்
முயன்று பார்த்து சொல்லுங்கள்
Is there a measure on the fastest shutter practicable without using a tripod?
are you using the kit lens with 350D?
how does it perform in outdoor shooting.(I am looking to upgrade to a DSLR)
Is 5400 (with lower f number )more suitable for indoor shots.
Karthik
One crude way to calculate the max handheld shutter speed is ,
if you are using a 50mm lens anything beyond shutter speed of 1/50 is going to cause camera shake. So the lens matters. Bigger the zoom worse the camera shake. So boosting ISO is the only safe way.
I dont use Kit lens often. Everyone says its bad, but I didnt find it too bad. I have a sigma 28-90, 70-300 which I use more often.
5400 is more of point and shoot which is very good for landscape shots.
400D is out now? Did you check it out ?
ஏன் இப்பல்லாம் புலம்பறது இல்ல? தனியாவே புலம்ப ஆரம்பிச்சிட்டியா?
கேமரா கர்ணன்
ஆனந்த்,
இந்த செட்டிங் எல்லாம் பாயிண்ட் அண்ட் ஷூட் கேமரால செய்ய முடியுமா?
என் கிட்ட இருக்கறது Canon Digital Ixus 750.
கைப்பு உங்க கேமராவில் manual mode இருக்கமாதிரி தெரியுதே
http://www.dcresource.com/reviews/canon/powershot_sd550-review/
shutter speed மாற்றும் வசதி இருக்கு என்று இதில் போட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் இந்த விதி பின்பற்றலாம். Shutter speed மாற்றுவதன் மூலம்,கேமரா தன் தேர்ந்து எடுக்கும்படி செய்ய முடியும்.
nicely written
Post a Comment