Friday, July 28, 2006

3 விதி

புகைப் பட வகுப்புகளில் முதலில் சொல்லிக் கொடுக்கப் படும் எளிய விதி இதுதான். படத்தை ஒன்பது சதுரங்களாக பிரித்துக் கொள்ள வேண்டும். நீளக் கோடுகளும், அகலக் கோடுகளும் சந்திக்கும் நான்குப் புள்ளிகளும் தான் படத்தில் நம் கண்களைக் கவரும் இடங்கள்.





படத்தில் நீங்கள் காட்ட விரும்பும் , முக்கிய விஷ்யத்தை இந்த நான்குப் புள்ளிகளின் ஏதேனும் ஒன்றில் இருக்க்மாறு செய்ய வேண்டும்.

பொதுவாக படத்தின் மத்தியில் முக்கிய காட்சி இருக்குமாறு எடுப்பதை விட இந்த முறை நல்லது. நம் கண்கள் படத்தின் மத்திக்கு செல்வதைவிட இந்த புள்ளிகளுக்குத்தான் முதலில் செல்லும்.


சில எடுத்துக் காட்டுகள்.







7 comments:

said...

நல்ல தகவல்கள்.
இது போன்ற போட்டோகிராபி சம்பந்தப்பட்ட விசயங்களைத் தெரிந்து கொள்ள வலை முகவரி தரமுடியுமா?

said...

அடிப்படை விதியை படம் போட்டு காட்டியதற்கு நன்றி. நிறைய விதிகளை சொல்லுங்க என்ன மாதிரி ஆளுங்களுக்கு பயன்படும்

said...

அண்ணாத்தே!
விதியைப் படிச்சிட்டேன். அடுத்த வாட்டி முயற்சி பண்ணறேன். நான் இன்னுமொரு படப்பதிவு போட்டுருக்கேன். பாத்துட்டு ஒரு critical analysis - lighting, angle, subject இப்படின்னு செஞ்சீங்கன்னா நல்லாருக்கும். நன்றி.

http://kaipullai.blogspot.com/2006/07/blog-post_115399878079830316.html

said...

இது மாதிரி உங்க எல்லா ரகசியங்களையும் வெளிய விடுங்க ஊர்ஸ்..

said...

மகேஸ்.
இந்த புத்தகம உங்க லைப்ரரியில் கிடைத்தால் படித்துப் பாருங்கள்

Understanding Exposure: Bryan Peterson


குறும்பன், கைப்பு, கப்பி
நன்றி.

said...

Cool blog!!
was wondering whether i can start posting some photography related stuff in my blogs. Now i guess i dont have to!!

Glad to see a fellow photography enthusiast in tamil blogging scene!!
Rock on! :-)

said...

முதல் பின்னூட்டகருக்கு இத்தகவல் உபயோகப்படும் என நினைக்கிறேன்!
(சீக்கிரம் ஜிலேபி எழுத்துக்களை சரிசெய்யுங்க.. :) )

http://dpreview.com/learn/

http://www.ephotozine.com/learn