ஏற்கனவே இந்த கதையை ( !? ) படிச்சு இருந்தாலும் தங்கத் தலைவி Natalie Portman க்காக இந்த படத்தை காசு கொடுத்தாவது பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில், advanced screening க்கு போகும் வாய்ப்புக் கிடைத்தது நெட்டில் கிரிக்கெட் ஒசியாய் லைவ்வாய் பார்க்கும் சந்தோஷ்ம் தான் ( ·ப்ரியாய் கிடைச்சா ... ).
படம் இந்த வெள்ளிக்கிழமை வெளிவருகிறது.
முழுக்கதையும் நான் சொல்லப்போவதில்லை. சர்வாதிகார அரசை எதிர்க்கும் முகமூடி அணிந்த super (anti) hero கதை என்றாலும், ஏகப்பட்ட உள்/வெளிக் குத்துக்கள் படத்தில் இருக்கின்றன. எண்பதுகளில் இங்கிலாந்தின் அரசியல் சமாச்சாங்கள் கொஞ்சம் தெரிந்துக் கொண்டு படம் பார்த்தால், நிறைய குத்துக்கள் புரியும்.

Natalie யின் மிகப் பெரிய ரசிகன் நான். (Star wars படங்களில் அவரின் பாத்திரத்தையும் சேர்த்து ) கூடிய விரைவில் ஆஸ்கர் வாங்கப் போகிறார் என்று எல்லாப் பட்சிகளும் சொல்கின்றன. ( போன வாரம் SNL லில் கலக்கியத்தை பார்த்தீர்களா ? ). மொட்டை போட்டு இருந்தாலும் தலைவி கலக்கல்தான் !!
V யின் குரலும் நடாலியின் நடிப்பும் படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ். மேற்றிக்ஸ் படங்களின் டைரக்டர்களும் அவரின் ஸிஷ்யரும் இந்த படத்தின் பின்னணியில் இருந்தாலும் special effects ல் நிறையவே அடக்கி வாசித்து இருக்கிறார்கள்.

V for Victory !
4 comments:
relations!
**முகமூடிகளின் அரசன்**
- by இணைய குசும்பன்
Veeran - by ஞானபீடம்
========= *** ==========
NO relations!
The Lion King!
========= *** ==========
ஞான்ஸ் பாட்டெல்லாம் போட்டு கலக்குறீங்க !
புதுப்பாட்டு ஏதாச்சும் போடுங்களேன்
Natalie was too god. Worth watching just for her.
நேத்தி தியேட்டருக்கு போனேன். ஆனா 15 நிமிசம் லேட். முதல் 15 நிமிசம் சில படங்கள்ல முக்கியமாச்சேன்னு திரும்பிட்டேன்..
// சர்வாதிகார அரசை எதிர்க்கும் முகமூடி அணிந்த super (anti) hero கதை என்றாலும், ஏகப்பட்ட உள்/வெளிக் குத்துக்கள் படத்தில் இருக்கின்றன //
இதுல எந்த குத்தும் இல்லியே...
// NO relations! //
யோவ் ஞானபீடம்... ஒரு முடிவோடதான் இருக்கீரு போல... நடக்கட்டும் நடக்கட்டும்..
Post a Comment