Monday, August 29, 2005

அழுவாதே பாண்டீங்க்

நாலாவது மேட்சில் , இரண்டாவது இன்னிங்ஸில் ரன் அவுட் ஆகிவிட்டு திட்டி விட்டு போயிருக்கும் பாண்டீங்கை பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது.

ஜோன்ஸ்க்கு அடிப்பட்டு மருத்துவமனைக்கு கூட்டி சென்று இருக்கிறார்கள். இங்கிலாந்து என்ன 10 பேரோடு மட்டும்தான் ஆட வேண்டும் என்று நினைத்தார் போல. Follow on ஆன பிறகு முதல் இன்னிங்க்ஸில் 5 விக்கட் எடுத்த ஜோன்ஸ் ஆட வேண்டும் என்றே இங்கிலாந்து விரும்பி இருக்கும்

கைக்கு நேரா பந்தை அடித்து விட்டு ஒடி அவுட் ஆகிவிட்டு substitute விதியை இங்கிலாந்து தவறாக பயன்படுத்துகிறது என்று அழுவதில் என்ன நியாயம் இருக்கிறது.


கடைசி பந்தில் 6 ரன்கள் அடிக்க கூடாது என்பதற்காக under arm போட்ட அணியில் இருந்து வந்த Sledging. mental disintegration எல்லாம் பேசும் பாண்டீங்கு தெரியாத என்ன , விதி எதுவும் மீறப்படவில்லை என்று.

அழுவாதே பாண்டீங்க். அடுத்த Ashes ஆஸ்திரேலியாவில் நடக்கும் போது பார்த்துக்கொள்ளலாம் !!!

0 comments: