யாரும் போடுவதற்குள் நான் போட்டு விடுகிறேன் !
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கிறார்.
கிருபா என்பவர் இயக்கும் "அன்புத் தோழி' படத்தில் தமிழ் போராளியாக நடிக்கிறார் திருமாவளவன்.
சென்னையை அடுத்த திரிசூலம் மலைப்பகுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இதில் திருமாவளவன் நடித்தார்.
வெடிகுண்டுகள் வெடிக்கும்போது எதிரிகளிடமிருந்து திருமாவளவன் தப்பிக்க வேண்டும். அத்தகைய காட்சி மலைப்பகுதியில் படமாக்கப்பட்டது. மேலும், சில வசனக் காட்சிகளும் படமாக்கப்பட்டன. திருமாவளவன் வசனம் பேசி நடித்தார்.
இது குறித்து இப்படத்தின் இயக்குநர் கிருபா கூறியது:
நல்ல அனுபவமுள்ள நடிகரைப் போல திருமாவளவன் நடிக்கிறார். காதலை மையமாகக் கொண்ட படம் என்றாலும் இதில் முக்கிய "கேரக்டர்' ஒரு போரளியுடையது. அந்த வேடத்தில்தான் திருமாவளவன் நடிக்கிறார். இதில் திருமாவளவனுக்கு ஜோடி இல்லை என்றார்.
"எனக்கு நாடக, சினிமா அனுபவம் கிடையாது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடுகிற வேடம் இது. அதனால்தான் இதில் நடிக்கிறேன்' என்றார் திருமாவளவன்.
------------
நன்றி.. தினமணி
Monday, August 01, 2005
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வரும்போது , அரசியல்வாதிகள் சினிமாவுக்கு வரவேண்டியதுதான் !
எழுச்சி நாயகன் திருமா ரசிகர் மன்றத்து தம்பிகளை மருத்துவர் அய்யா என்ன அறிவுறை கொடுப்பார்
அந்த படத்தின் 100 வது நாள் விழாவுக்கு ஜன கன மன வை உல்டா பண்ணி வலைப்பூவில் பாட்டெழுத இப்பவே ஆட்கள் ரெடி :)
பமக தலைவர் முகமூடி அவர்களே,
நீங்கள் சினிமாவில் நடிப்பது எப்போ?
அப்படியே கட்சி தொண்டர்களுக்கும் ஒரு சான்ஸ் வாங்கி கொடுங்க !!
ஆஹா... தொண்டர் பாசம் புல்லரிக்குதே..
நான் ஏற்கனவே சினிமாவில் நடிச்சிருக்கேன் ஆனந்த். தமிழ்நாட்டுல சினிமா நடிகர்கள் முத்ல்வர் ஆவ எதிர்ப்பு பலமா இருக்கறதால சினிமா நடிகர் கவர்னர் ஆக் ஆதரவு தரும் கலிபோர்னியாவுக்கு வந்திட்டேன்...
2015 கலிபோர்னியா கவர்னர் அண்ணன் முகமூடி வாழ்க ன்னு சொல்லி பாருங்க சூப்பரா இருக்கும்
ஏற்கனவே நடிச்சு இருக்கீங்களா?
எந்த படம் சொல்லுங்க, 1000 நாள் தொடர்ந்து பார்த்து சாதனை பண்ணலாம்னு இருக்கிறேன் !!
( நீங்க கவர்னர் ஆயிட்டா, சிவாஜிநகர் President ஆயிடுவாரா? ( constituion யை மாத்தி ?)
ஏனுங்க1 எல்லா அரசியல் வாதிகளுக்கும் நல்லா நடிக்க வரும்ங்க! இல்லேன்னா அரசியலே பண்ண முடியாதே! :-))
//ஏனுங்க1 எல்லா அரசியல் வாதிகளுக்கும் நல்லா நடிக்க வரும்ங்க! இல்லேன்னா அரசியலே பண்ண முடியாதே! :-))
Super O Super
"சினிமாவில் நடிக்கிறார் திருமாவளவன்"
நம்பியாரை மிமிக்ரி செய்யும் விவேக்கின் குரலில்:
"சினிமாவிலுமா?"
அன்புடன்,
டோண்டு ராகவன்
$
?
இவராலும் இவரால் டமில்க்குடிதாங்கி பட்டம் பெற்ற மருத்துவர் இராமதாசு அய்யாவாலும் வேறு என்ன உருப்படியாகச் செய்ய முடியும்.
பார்க்க:
டமில்க்குடிதாங்கியின் டமில்க் கூச்சல்
http://kgans.blogspot.com/2005/08/blog-post_03.html
அன்புடன்,
கணேசன்.
padathile cigarette pidika maaterendru ninaikiren. oru velai thuppaki kondu varuvaro.?
சோவும் நடிகர்தான் என்பதை டோண்டுவிற்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். விவேக் நம்பியார் குரலில் சொன்னது சோவுக்கு பொருந்தும். திருமாவளவன் திரைப்படத்தில் நடிப்பதில் சிலர் எரிச்சலடையக் காரணம் என்ன. அவர் யாரையாவது சினிமாவில் நடிக்கக்கூடாது என்று
சொன்னாரா.ரஜினி காந்த அரசியலில் நடிக்க முயன்று தோற்றுப்ப் போனார். அவருக்கு அரசியல்
தெரியவில்லை.ச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்ற கதையாயிற்று
போராளி வேடம் என்றால் துப்பாக்கி இல்லாமலா?
சினிமாவில் வன்முறையால் எவ்வள்வு சீரழிவு நாட்டு என்று போராட்டம் நடத்த வேண்டியதுதான்
அன்புள்ள டோண்டு,
இன்னிக்கு நவீனப்பெண் போட்ட பதிவைப் பாத்தீங்களா?
விசிதா அவர்களே,
சோ ஒரு பெயர் பெற்ற நடிகர், எழுத்தாளர், வழக்குறைஞர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் விமரிசகர், கொள்கை வீரர். ஆனால் நிச்சயமாக அரசியல் வியாதி அல்ல. திருமா அவர்கள் படத்தில் நடிப்பது வேடிக்கையாக பட்டது, ஆகவே மெல்லிய தமாஷாகப் போட்டேன்.
கார்திக் அவர்களே,
நவீனப் பெண்ணின் பதிவைப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. இதுதான் மாடர்ன் ஆர்ட்டோ? அதை வைத்து நானும் பதிவு போட்டேன், பார்த்தீர்களா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
ramadoss um thirumavumdhan thamizaga arasiyalai cinemavilirundhu viduvippargal endru ninaithen. adhuvum po..chaa?
/ஒன்றும் புரியவில்லை. /
ஒன்றும் புரியவில்லை என்று சொல்வதால் சொல்கிறேன்,நடுவிலே = குறி இருந்ததாக நினைவு. :-)
Post a Comment