Monday, August 01, 2005

பெப்ரவரி 14

Caution: Spoliers Ahead !!!
வழக்கம் போல


1. காதலை சொல்ல தயங்கும், கிராமத்தில் இருந்து வரும், நாயகன்
(இவர் ஏன் மெனக்கெட்டு பெண்களூர் போய் படிக்கிறார் என்று தெரியல. கல்லுரியில் எங்கும் தமிழ் , எதிலும் தமிழ்,
Project முதற் கொண்டு Farewell பாட்டு வரை. அண்ணன் வட்டாள் நாகராஜுக்கு இந்த கல்லூரி பற்றி தெரியாது போல் இருக்கிறது, களம் சென்னையாகவே இருப்பதில் என்ன கஷ்டமோ ? )

2 அழகு பொம்மையாய் நடிக்க தெரியாமல் பக்கத்தில் காதலன் இருப்பது தெரியாமல் தேடும் பணக்கார நாயகி

(பல வருடங்களுக்கு முன்னமே retire ஆகி விட்ட Magic Johnson, Jordon , எப்பவோ வந்த Phil collins பாட்டு. பிடிகிறது, contemporariesஆன Leborn James, Justin Timberlake எல்லாம் பிடிக்காது போல் இருக்கிறது இந்த 18 வயது அமெரிக்க பெண்ணிற்கு !)

3. காப்பி அடிக்க ஒரு ஆங்கிலபடம் , இதில் You Got Mail
(தெரியாத ஒருவனிடம் வரும் கடிததை வைத்து காதலிக்க தொடங்கும் நாயகி, நண்பனாய் பக்கத்தில் இருந்து கொண்டே கடிதம் எழுதுபவனை கிண்டலடிக்கும் நாயகன்.)
முதல் முறையாக நாயகி எழுதும் கடிதம் MrX எப்படி போய் சேர்ந்தது . நாயகி மறைவான இடத்தில் கடிதம் வைக்க போகிறாள் என்று MrX எப்படி தெரியும்

4 .நாயகன் குடித்து விட்டு குத்தாட்டம் போட எப்பவும் தயாராக இருக்கும் குலுக்கல நடிகை

5 காதலை வெறுக்கும் , பொம்பளை பொறுக்கி வில்லன்



நன்றாக:

1, நாயகன் மனசாட்சி யோடடு பேசிக்கொள்ளும் காட்சிகள்

2. இயல்பாய் பாசம் காட்டும் நாயகின் தாத்தா பாட்டி

3. நாயகன் வேடத்துக்கு நன்றாக பொருந்தும் பரத்

4. இரட்டை வசனம் இல்லாத நகைசுவை

5. பார்த்து தலைவலி வராமல் கழிந்த என் ஞாயிறு மதியம் !!

5 comments:

said...

You got mail எத்தனை முறை தமிழில் காப்பி அடிக்கப்படும் ?

said...

எங்கேயோ பார்த்த படம் போல இருக்கே என்று பார்க்கும் போதும் நான் நினைத்து கொண்டிருந்தேன்

said...

Ragaysia dance sooper ;)

said...

மொத்தத்திலே என்ன சொல்ல வர்றீங்க ஆனந்த்?

said...

//5. பார்த்து தலைவலி வராமல் கழிந்த என் ஞாயிறு மதியம்

மாயவரத்தான்,
இதுதான் சொல்ல வந்தது.
பார்த்து சலித்து போன விஷயங்கள் நிறய இருந்ததாலும் ,

தலைவலி வராத அளவிற்கு பார்க்கும் படியாகவே இருந்தது (மற்ற சில படங்களை போல இல்லாமல்!)