அ ! ஆ !! அய்யோ !!!
ரஹ்மானின் "அ ஆ" கேட்டீர்களா ?
கடைசியாய் ரஹ்மான் கொடுத்த நல்ல பாட்டு எப்போ என்றே மறந்து விடும் போல் இருக்கு.
கல்லூரியில் ரோஜா முதல் தடவை கேட்ட போது அசந்தது இன்னமும் ஞாபகம் இருக்கு. ( இளையாராஜவின் தொண்டன் என கூறிக் கொள்ளும் என் அறை நண்பன் தவிர) என் நண்பர்கள் எல்லோரும் இவர்தான் இளையராஜாவுக்கு போட்டி என் பேசிக்கொண்டோம்.
இந்திக்கு போனதும், பாம்பே டீரிம்ஸ் என்று போன பிறகு தமிழில் அவ்வளவாக கவனம் செலுத்தாத போதிலும் ரஹ்மான் பாட்டு என்று கேட்க தோண்டும் .
இவருக்கு என்ன ஆச்சு இப்போ ? என் ரசனை மாறி விட்ட மாதிரி என்க்கு தெரியவில்லை. இல்லை SJ சூரியா போன்றவர்களுக்கு இந்த அளவு போதும் என்று தூக்கத்தில் இசை அமைத்து விட்டாரா ?
இதில் மதுஸ்ரீ , சாதனா சர்கம் போன்றவர்களின் தமிழ் கொலை வேறு.
SPB யும் ஷ்ரேயா வும் ஒரு பாட்டை காப்பாற்றி இருக்கிறார்கள்.மற்றவற்றை கேட்டு விட்டு அ ஆ என்று காதை பிடித்து கொண்டதுதான் மிச்சம்.
Wednesday, July 20, 2005
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
மூணு நாள் சாப்பிடாம , மொட்டை அடிச்சிகிட்டு , நூறு குட்டி கரணம் போட்டுவிட்டு இருட்டு அறையில் மூ¨ல்யில் முக்காடு போட்டு கேளுங்க. அப்புறம் கண்ணில், காதில், மூக்கில், வாயில் இரத்தம் வரலைன்னா என் பேரை
முனியம்மா 7B மாத்திக்கிடுதேன்.
"ரஹ்மான் ஒரு முஸ்லிம், சூரியா ஒரு கிரிஸ்தவர், நீங்கள் ஒரு இந்து. அதனால் தானே இப்படி எழுதி இருக்கிறீர்கள் "
என்று யாரும் சண்டைக்கு வர போறாங்க :))
உண்மையிலே பாடல்கள் படு மோசம் தான்.
=====
Mahesh Kumar
சூரியா கிரிஸ்தவர் என்று எனக்கு தெரியாதுங்கனா.
ஆனா நிலா அக்காவோட ஒரிசனல் பேரு கேளுங்கோ,
கரெக்டாய் போட்டு தாக்குவனுங்கனா.
ஹி.ஹி.
I think Yuvan is Number 1 in tamil, Rahman is no more in demand.
வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!
:) i may agree to Madhushree not Sadhana Sargam. She picked htings quite fast. above average i feel so.
Post a Comment